வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 7 பைசா குறைந்தது.
இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலர் மதிப்பு ரூ.39.85/39.86 என்ற அளவில் இருந்தது. வியாழக்கிழமை இறுதி நிலவரம் 1 டாலர் ரூ.39.92/39.93.
ரிசர்வ் வங்கி சென்ற வாரம் வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதம் அரை விழுக்காடு உயர்த்தியது. இதனால் பணப்புழக்கம் குறைவதாலும், பங்குச் சந்தையிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்த காரணத்தால் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்வதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இன்று வர்த்தகம் நடக்கும் போது 1 டாலர் ரூ.39.88 முதல் ரூ. 39.89 என்ற அளவில் விற்பனையானது.