வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், இன்று காலை 1 டாலரின் மதிப்பு ரூ.40.04/40.05 ஆக இருந்தது.
இது நேற்றைய இறுதி விலையை விட 16 பைசா குறைவு, நேற்று மாலையில் 1 டாலரின் மதிப்பு ரூ.40.20/40.22 ஆக இருந்தது.
காலையில் வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, 1 டாலரின் விலை ரூ.40 க்கும் அதிகரித்தது.
பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் அதிரித்தால், அந்நியச் செலவாணி சந்தையில் டாலரின் மதிப்பு குறைந்து, இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
நேற்று பெட்ரோலிய நிறுவனங்கள், இறக்குமதியாளர்கள், வங்கிகள் அதிக அளவு டாலர்களை வாங்கினார்கள்.
ஆனால் இன்று காலையில் வங்கிகள் டாலரை வாங்குவதில் ஆர்வம் காண்பிக்கவில்லை.
மதியத்திற்கு மேல் டாலரின் மதிப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.