வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இன்று டாலரின் மதிப்பு 5 பைசா குறைந்தது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது 1 டாலரின் மதிப்பு ரூ.39.63/39.65 பைசாவாக இருந்தது. வெள்ளிக் கிழமை இறுதி விலை ரூ.39.65/39.66.
இன்று நடந்த வர்த்தகத்தில் 1 டாலர் ரூ.39.56 முதல் ரூ,39.64 பைசா வரை விற்பனையானது.
அந்நியச் செலவாணி அதிக அளவு வெளியேறுவதும், ஏற்றுமதியாளர்கள் அதிக அளவு டாலரை விற்பனை செய்வதால், இதன் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.