இந்தியா-மலேசியா பொருளாதார ஒப்பந்த பேச்சுவார்த்தை துவக்கம்!

திங்கள், 4 பிப்ரவரி 2008 (17:44 IST)
இந்தியா, மலேசியா இடையே ஒருங்கிணைந்த பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான வர்த்தக பேச்சுவார்த்தை குழுக்கூட்டம் இன்று கோலாலம்பூரில் துவங்கியது.

இந்தியா தரப்பில் வர்த்தகத்துறை இணை செயலாளர் தஷ்சும், மலேசியா தரப்பில் சர்வதேச வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சக துணை பொது செயலாளர் ரேபேக்கா பாத்திமா மரியா ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தியா-மலேசியா இடையேயான சந்தை, வர்த்தகம் குறித்து மட்டுமல்லாமல், இரு நாடுகளின் முதலீடுகள் குறுத்தும் இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. இந்திய-ஆசியான் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின் அங்கமான வர்த்தக பேச்சுவார்த்தை குழு இதற்கான பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டுள்ளது.

மலேசியாவிற்கான இந்திய தூதர் அசோக் கந்தா கூறுகையில், "ஒப்பந்திற்கான கால அவகாசம், பணிக் குழு உட்பட அனைத்து விதமான அம்சங்கள் குறித்தும் விவாதிப்பதற்காக இந்த கூட்டம் நடக்கிறது. ஒருங்கிணைந்த பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை இந்தியாவுடன் மேற்கொள்வதில் மலேசியா மிகவும் ஆர்வமாக உள்ளது. இந்த ஒப்பந்ததிற்கான பேச்சுவார்த்தை 2009-ம் ஆண்டிற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்