பொதுத்துறை நிறுவனமான இன்ஜினியரிங் புராஜக்ட் (இந்தியா) லிமிடெட் 10 விழுக்காடு பங்கு இலாப ஈவு அறிவித்துள்ளது.
இந்த நிறுவனம் பொதுத்துறை நிறுவனங்களில் மினி ரத்னா அந்தஸ்து பெற்றது.
இதன் நிர்வாக இயக்குநர் ஏ.கே.ரத்வானி, நேற்று டெல்லியில் இந்த நிதி ஆண்டிற்கு(2007-08) இடைக்கால இலாப பங்கு ஈவு தொகையாக ரூ.3 கோடியே 54 லட்சத்துகான காசோலையை மத்திய கனரக தொழில்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான அமைச்சர் சந்தோஷ் மோகன் தேவ்விடம் வழங்கினார்.
இந்நிறுவனம் ரூ.3,300 கோடி மதிப்பிலான 77 திட்டங்களில் பல்வேறு கட்டுமான பணிகளை செய்து வருகிறது.