வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கிய போது டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 6 பைசா குறைந்தது.
காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.39.50/39.51 ஆக இருந்தது. இது நேற்றைய இறுதி விலையை விட 6 பைசா குறைவு. நேற்றைய இறுதி விலை ரூ.39.56/39.57.
பங்குச் சந்தையில் அந்நிய முதலீடு அதிக அளவில் இருந்தது. இதனால் அந்நியச் செலாவணி சந்தையிலும் டாலர்கள் குவிந்தன. டாலரின் மதிப்பு மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரிசர்வ் வங்கி தலையீட்டினால் டாலரின் மதிப்பு அதிக அளவு குறையாமல் தடுக்கப்பட்டது என வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இன்று மாலையில் வர்த்தகம் முடியும் போது, 1 டாலரின் மதிப்பு ரூ.39.45 ஆக குறையும் என்று வர்த்தகர்கள் கருதுகின்றனர்.