டாலர் மதிப்பு 8 பைசா குறைந்தது

புதன், 23 ஜனவரி 2008 (12:59 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கிய போது டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 8 பைசா அதிகரித்தது.

காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.39.40 /39.41 ஆக இருந்தது. இது நேற்றைய இறுதி விலையை விட 8 பைசா குறைவு. நேற்றைய இறுதி விலை ரூ.39.48/39.49.

அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை முக்கால் விழுக்காடு (0.75 % ) குறைத்தது. இதனால் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய துவஙகி உள்ளனர்.இதனால் கடந்தத இரண்டு தினங்களாக இருந்து வந்த நிலைமை மாறி, இன்று அந்நிய செலவாணி சந்தைக்கு டாலர் வரத்து துவங்கியது. நேற்று காலையில் டாலரின் மதிப்பு 15 பைசா அதிகரித்தது நினைவிருக்கலாம்.

வர்த்தகம் விறுவிறுப்பாக நடக்க துவங்கிய பிறகு, 1 டாலர் ரூ.39.40 முதல் ரூ.39.51 என்ற விலையில் விற்பனையானது. அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் டாலர் வாங்க துவங்கினால் மதியத்திற்கு மேல் 1 டாலர் ரூ.39.50 பைசா முதல் ரூ.39.55 பைசா வரை விற்பனையாகலாம் என்று வர்த்தகர்கள் கருதுகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்