உருக்கு உற்பத்தி இந்த நிதி ஆண்டில் முதல் 9 மாதங்களில் (ஏப்ரல்-டிசம்பர்) 380 லட்சத்து 5 ஆயிரம் டன் உற்த்தி செய்யப்பட்டுள்ளது.
இது சென்ற ஆண்டில் இதே கால கட்டத்தை விட 6.6 விழுக்காடு அதிகம். சென்ற ஆண்டு 350 லட்சத்து 70 ஆயிரம் டன் உற்பத்தி செய்யப்பட்டது.
இதே போல் சென்ற வருடத்தைவிட அதிக அளவு உருக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வருடம் 40 லட்சத்து 90 ஆயிரம் டன் உருக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. சென்ற வருடம் 20 லட்சத்து 93 ஆயிரம் டன் இறக்குமதி செய்யப்பட்டு இருந்தது.
இந்த வருடம் 30 லட்சத்து 85 ஆயிரம் டன் உருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது சென்ற வருடத்தை விட 9.1 விழுக்காடு அதிகம்.(சென்ற வருடம் 30 லட்சத்து 52 ஆயிரம் டன் ஏற்றுமதி செய்யப்பட்டது).