டாலர் மதிப்பு 2 பைசா குறைவு!

வியாழன், 3 ஜனவரி 2008 (19:37 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று மாலை டாலரின் மதிப்பு 2 பைசா குறைந்தது. இறுதியில் 1 டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.39.40/39.41 என்ற அளவில் முடிந்தது. (நேற்றைய இறுதி விலை 39.42/43).

இன்று அந்நியச் செலாவணி சந்தையில் 1 டாலர் ரூ.39.37 முதல் ரூ.39.47 வரை விற்பனையானது.

இன்று அந்நியச் செலாவணி சந்தையில் அதிகளவு டாலர் வரத்து இருந்ததால், அதிகளவு விலை ஏற்றமும், இறக்கமும் காணப்பட்டது. டாலரின் மதிப்பு அதிகளவு சரியாமல் இருக்க ரிசர்வ் வங்கியின் தலையீடு இருந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். அத்துடன் சில வங்கிகள் பெட்ரோலிய நிறுவனங்களுக்காக டாலரை வாங்கின.

இன்று ரிசர்வ் வங்கி 1 டாலர் மதிப்பு ரூ.39.45 என நிர்ணயித்தது. இது நேற்றைய மதிப்பை விட 2 பைசா குறைவு. நேற்று நிர்ணயித்த மதிப்பு 39.43.

வெப்துனியாவைப் படிக்கவும்