டாலர் மதிப்பு உயர்வு!

வியாழன், 3 ஜனவரி 2008 (13:14 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலரின் மதிப்பு ரூ.39.46 / 47 ஆக இருந்தது. பிறகு 1 டாலர் ரூ.39.45 முதல் ரூ.39.46 வரை விற்பனையானது (நேற்றைய இறுதி நிலவரம் 1 டாலர் ரூ.39.43 / 39.44).

சர்வதேச சந்தையில் நேற்று பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலை 1 பீப்பாய் 99 டாலராக உயர்ந்தது. அத்துடன் சில வங்கிகள் டாலரை வாங்குவதில் ஆர்வம் காட்டியதால் டாலரின் மதிப்பு அதிகரித்து இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

ஆசிய பங்குச் சந்தையில் இன்று குறியீட்டு எண்கள் 1 முதல் 2 விழுக்காடு வரை குறைந்தன. இந்திய பங்குச் சந்தையிலும் காலையில் வர்த்தகம் தொடங்கிய போது பங்கு விலைகள் குறைந்தன. பிறகு மீண்டும் பங்கு விலை அதிகரித்த்து.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் கணிசமான அளவு பங்குகளை விற்பனை செய்ததும், டாலரின் மதிப்பு உயர்வதற்கு காரணம் என்று சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

ரிசர்வ் வங்கி நிர்ணயித்த அந்நியச் செலாவணி மதிப்பு வருமாறு.

1 டாலர் ரூ. 39.43
1 யூரோ ரூ. 57.76
1 பவுன்ட் ரூ. 78.34
100 யென் ரூ. 35.38

வெப்துனியாவைப் படிக்கவும்