அடிப்படை தொழில் உற்பத்தி பாதிப்பு!

வெள்ளி, 28 டிசம்பர் 2007 (12:13 IST)
பெட்ரோலிய உற்பத்தி உட்பட ஆறு அடிப்படை தொழில்களின் உற்பத்தி அக்டோபர் மாதத்தில் குறைந்துள்ளது.

பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி, பெட்ரோலிய சுத்திகரிப்பு தொழில்கள், மின் உற்பத்தி, நிலக்கரி உற்பத்தி, சிமென்ட், உருக்கு உற்பத்தி ஆகிய ஆறு அடிப்படை தொழில் துறைகளும் மத்திய அரசின் தொழில் உற்பத்தி அட்டவணையில் 26.7 விழுக்காடு பங்கு வகிக்கின்றன.

இதில் நிலக்கரி உற்பத்தி தவிர மற்ற ஐந்து துறைகளின் வளர்ச்சி கடந்த ஆணடு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த அக்டோபர் மாதம் குறைந்துள்ளது.

இந்த அக்டோபரில் இவைகளின் உற்பத்தி அளவு 6.2 விழுக்காடாக உள்ளது. இதன் உற்பத்தி அளவு சென்ற வருடம் அக்டோபரில் 8.9 விழுக்காடாக இருந்தது.

சென்ற வருடம் மின் உற்பத்தி 9.7 விழுக்காடாக இருந்தது, இந்த அக்டோபரில் 4.2 விழுக்காடாக குறைந்துள்ளது. சென்ற அக்டோபரில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி 9.3 விழுக்காடாக இருந்தது. இதன் உற்பத்தி இந்த அக்டோபரில் 0.1 விழுக்காடாக குறைந்துள்ளது.

சென்ற அக்டோபரில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு 18.1 விழுக்காடாக இருந்தது, இப்போது 2.8 விழுக்காடாக குறைந்துள்ளது.

நிலக்கரி உற்பத்தி 9.2 விழுக்காடாக அதிகரித்துள்ளது. சிமென்ட், உருக்கு உற்பத்தி குறைந்துள்ளது. இவை மத்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரபூர்மான புள்ளி விபரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்