டாலர் மதிப்பு குறைவு!

புதன், 26 டிசம்பர் 2007 (15:38 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் டாலரின் மதிப்பு 5 பைசா குறைந்தது.

பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் அதிகளவு முதலீடு செய்தன. இதனால் அந்நியச் செலாவணி சந்தையில் டாலர் வரத்து அதிகளவு இருந்தது.

பெட்ரோலிய நிறுவனங்கள் கச்சா எண்ணெய்க்கான பணத்தை கொடுப்பதற்காக மாத இறுதியில் டாலர்களை வாங்கும். அந்நிய நாடுகளில் கிறிஸ்துமஸ் விடுமுறையாக இருப்பதால், இவை இன்று டாலரை வாங்கவில்லை.

அந்நியச் செலாவணி சந்தையில் காலையில் 1 டாலரின் மதிப்பு ரூ.39.42 முதல் ரூ.39.44 பைசாவாக இருந்தது. வர்த்தகம் தொடங்கிய பிறகு டாலரின் மதிப்பு குறைந்து 1 டாலர் ரூ.39.38 முதல் 39.39 பைசா வரை விற்பனையானது.

இன்று ரிசர்வ் வங்கி நிர்ணயித்த அந்நிய நாணயங்களின் மதிப்பு.

1 டாலர் ரூ.39.49
1 யூரோ ரூ.56.78
1 பவுன்ட் ரூ.78.33
100 யென் ரூ.34.61

வெப்துனியாவைப் படிக்கவும்