பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம்!

Webdunia

வியாழன், 20 டிசம்பர் 2007 (11:45 IST)
பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கியவுடன் நேற்று இருந்த நிலைமை மாதிரியே இன்றும் இருந்தது.

காலையில் வர்த்தகம் தொடங்கிய போது சென்செக்ஸ் 126.92 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 19,217.88 ஆக அதிகரித்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டியும் 25.50 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 5776.65 ஆக உயர்ந்தது.

காலையில் இருந்து பங்குகளின் விலை ஏற்ற இறக்கமாக உள்ளது. காலை 11 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 136.17 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 19,288.15 ஆக இருந்தது. இதே போல் மிட் கேப் 25.27,சுமால் கேப் 33.78, பி.எஸ்.இ-500 39.56 புள்ளிகள் அதிகரித்து இருந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 29.60 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 5780.75 புள்ளியாக இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் சி.என்.எக்ஸ் டிப்டி தவிர மற்ற பிரிவு குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தன.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் இன்போசியஸ், ஒஐ.டி.சி., ரான்பாக்ஸி, சத்யம், எஸ்.பி.ஐ,ஏ.சி.சி, பார்தி ஏர்டெல், ஹெச.டி.எப்.சி.,மாருதி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் எனர்ஜி, ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், டி.எல்.எப்., டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், விப்ரோ, ஹின்டால்கோ ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்து இருந்தது. எல்.அண்ட் டி., பஜாஜ் ஆட்டோ,கிரசிம், ஹெச்.டி.எப்.சி. வங்கி, என்.டி.பி.சி., ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்து இருந்தது.

ஜப்பான் பங்குச் சந்தையில் பங்கு விலை அதிகரித்தது. அதே நேரத்தில் ஹாங்காங், சிங்கப்பூர் பங்கு சந்தைகளில் பங்கு விலைகள் குறைந்தன. அமெரிக்க பங்குச் சந்தையிலும் பங்கு விலைகள் குறைந்தன.

இரண்டு பங்குச் சந்தைகளிலும் நேற்று காலையில் பங்குகளின் விலை அதிகரித்து கொண்டே இருந்தது. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு நிலைமை தலைகீழாக மாறியது கவனிக்கத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்