அந்நியச் செலவாணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 4 பைசா குறைந்தது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம தொடங்கிய போது 1 டாலரின் மதிப்பு ரூ.39.50 முதல் ரூ.39.51 ஆக இருந்தது.
பங்குச் சந்தைகளில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் அதிக அளவு முதலீடு செய்தனர். இதனால் அந்நிய செலவாணி சந்தையிலும் டாலரின் வரத்து அதிக அளவு இருந்தது. 1 டாலர் ரூ.39.45 முதல் ரூ.39.52 வரை விற்பனையானதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
ரிசர்வ் வங்கி இன்று நிர்ணயித்த அந்நிய செலவாணி விலை விபரம்.