மென் இரும்பு விரிவாக்கத்திற்கு தடை: ஒசிமா கவலை!

செவ்வாய், 11 டிசம்பர் 2007 (19:24 IST)
ஒரிசா மாநிலத்தில் மென் இரும்பு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின் விரிவாக்கத்திற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது.

ஒரிசா மாநிலத்தில் அதிகளவு இரும்பு தாது கிடைக்கின்றது. இதை மூலப் பொருளாக கொண்டு மென் இரும்பு தயாரிக்கும் தொழிற்சாலைகளை அமைக்குமாறு ஒரிசா மாநில அரசு 2000 ஆம் ஆண்டுகளில் தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை ஏற்று பல தொழிலதிபர்கள் மென் இரும்பு தயாரிக்கும் தொழிற்சாலையை தொடங்கினார்கள்.

இந்த மென் பொருள் இரும்பு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை தொடங்கியவர்கள் இதை தற்போது விரிவாக்கம் செய்ய முயற்சித்து வருகின்றனர். இதற்கு ஒரிசா அரசு அனுமதி வழங்க மறுத்து விட்டது.

இது குறித்து ஓரிசா மென் இருப்பு உற்பத்தியாளர்கள் சங்க (ஒசிமா ) ஆலோசகர் நபா கிஷோர் தாஸ் கூறியதாவது:

தற்போது ஒரிசாவில் உள்ள் மென் இரும்பு தொழிற்சாலைகள் வருடத்திற்கு 70 லட்சம் டன் மென் இரும்பு உற்பத்தி செய்கின்றன. இவைகளை விரிவாக்கம் செய்ய அனுமதி கொடுத்தால் அடுத்த மூன்று ஆண்டுகளில் மேலும் 100 லட்சம் டன் மென் இரும்பை உற்பத்தி செய்வார்கள். அத்துடன் மாநில அரசு எதிர்காலத்தில் உருக்கு உற்பத்தியை உயர்த்த நிர்ணயித்த இலக்குகளுக்கும் உதவிகரமாக இருப்பார்கள். இவைகளின் விரிவாக்கத்திற்கு மாநில அரசு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்