ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் சேர்மன் முகேஸ் அம்பானி ஐக்கிய அரபு குடியரசின் பிரதமரும், துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமை துபாயில் சந்தித்தார்.
இந்த பிராந்தியத்தில் எதிர்கால முதலீடுகள் பற்றி ஷேக் முகமதுவும் முகேஷ் அம்பானியும் ஆலோசனை நடத்தியதாக துபாயின் அதிகாரபூர்வ செய்தி ஊடகம் டபிள்யூ.ஏ.எம் (வாம்) தெரிவித்தது.
இந்த சந்திப்பின் போது அம்பானி துபாயின் வளர்ச்சி பற்றியும், ஷேக் முகமதுவின் நீண்ட கால திட்டங்கள் குறித்தும் பாராட்டினார். இத்துடன் ஐக்கிய அரபு குடியரசில் வர்த்தகர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் செய்து தரும் வசதிகள் பற்றியும் பாராட்டினார்.
இந்த பிராந்தியத்தில் அம்பானி குழுமத்தின் எதிர்கால முதலீடு பற்றி ஷேக் முகமது முகேஷ் அம்பாணியுடன் பரிசீலித்தார்.
இந்த சந்திப்பின் போது துபாய் விமான துறை சேர்மன் ஷேக் அகமது பின் சையத் அல் மக்தூம், எமிரேட் ஏர்லைன்சின் தலைவர் மற்றும் உடன் அதிகாரிகள் உடன் இருந்தனர் என்று வாம் தெரிவித்துள்ளது.