பங்குச் சந்தை ஏற்ற இறக்கம்!

Webdunia

திங்கள், 10 டிசம்பர் 2007 (12:03 IST)
பங்குச் சந்தைகளில் காலையில் இருந்தே குறியீட்டு எண்கள் ஏற்ற இறக்கமாக இருக்கி்ன்றன.

மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கிய 5 வது நிமிடத்தில் சென்செக்ஸ் 65.79 புள்ளிகள் குறைந்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையிலும் 22.55 புள்ளிகள் குறைந்தன. இதற்கு காரணம் உலோகம், பெட்ரோலியம், ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பங்குகள் அதிகளவு விற்பனை செய்யப்பட்டன. இதனா‌ல் இவைகளின் விலை குறைந்து குறியீட்டு எண்க‌ள் சரிந்தன.

ஆனால் 10 மணிக்கு பிறகு நிலைமை சீரானது. காலை 11 மணியளவில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 9.27 புள்ளிகள் குறைந்து கு‌றியீட்டு எண் 19,956.73 புள்ளிகளாக இருந்தது. அதே நேரத்தில் மற்ற பிரிவில் உள்ள பங்குகளின் விலை அதிகரித்தது. மிட் கேப் 72.28, சுமால் கேப் 147.01, பி.எஸ்.இ-500 17.04 புள்ளிகள் அதிகரித்திருந்தன.

இதே போல் தேசிய பங்குச் சந்தையில் நிஃ‌ப்டி 17.60 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 5956.70 ஆக இருந்தது. மற்ற பிரிவுகளில் தகவல் தொழில் நுட்பம், சி.என்.எக்ஸ் 100 தவிர மற்ற பிரிவு குறியீட்டு எண்கள் அதிகரித்து காணப்பட்டன.

வெப்துனியாவைப் படிக்கவும்