டாலர் மதிப்பு 7 பைசா உயர்வு!

Shruthi Agarwal

புதன், 5 டிசம்பர் 2007 (19:01 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 7 பைசா அதிகரித்தது.

இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலர் ரூ.39.45/39.46 என்ற அளவில் இருந்தது. இன்று 1 டாலர் ரூ. 39.42 முதல் ரூ.39.50 வரை விற்பனையானது. பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் அதிக அளவில் பங்குகளை வாங்கினர். இதன் பிரதிபலிப்பு அந்நியச் செலாவணி சந்தையிலும் காணப்பட்டது. அதே போல் விற்பனையிலும் ஈடுபட்டனர்.

ரிசர்வ் வங்கி அந்நிய செலாவணி சந்தையில் டாலர்களை வாங்குகின்றது என்ற சந்தேகம் வர்த்தகர்கள் மத்தியில் நிலவியதால் டாலரின் மதிப்பு அதிகளவு குறைய வில்லை என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர். இறுதியில் நேற்றைய இறுதி நிலவரத்தை விட டாலரின் மதிப்பு 7 பைசா உயர்ந்தது.

ரிசர்வ் வங்கி 1 டாலரின் மதிப்பு ரூ.39.45 என நிர்ணயித்தது. இது நேற்று நிர்ணயித்த விலையை விட 2 பைசா அதிகம்.

மற்ற செலாவணிக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு :

1 யூரோ ரூ.58.03/58.04 (நேற்று 57.93/94)
1 பவுன்ட் ரூ.80.41/43 (81.15/16)
100 யென் ரூ.35.80/81 (35.87/88)

வெப்துனியாவைப் படிக்கவும்