நோகியோ விரிவாக்கம் : 750 லட்சம் டாலர் மூதலீடு!

Webdunia

புதன், 5 டிசம்பர் 2007 (15:48 IST)
நோகியோ செல் ஃபோன் நிறுவனம் சென்னையில் அமைந்துள்ள தொழிற்சைலையை 750 லட்சம் டாலர் முதலீட்டில் விரிவாக்கம் செய்ய போகின்றது.

சர்வதேச அளவில் செல் ஃபோன் விற்பனையில் முன்னணி நிறுவனமாக நோகியோ நிறுவனம் உள்ளது. ஃபின்லாந்தைச் சேர்ந்த இதன் செல் ஃபோன் உற்பத்தி தொழிற்சாலை ஸ்ரீ பெரும்புதூருக்கு அருகே அமைந்துள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் நோகியோ செல் ஃபோன்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதுடன் அந்நிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த தொழிற்சாலையில் இதுவரை 21 கோடி டால‌ர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இங்கு 6,000 பேர் பணிபுரிகின்றனர்.

ஸ்ரீ பெரும்புதூரில் அமைந்துள்ள தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய நோகியோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த விரிவாக்கத்திற்தகாக 750 லட்சம் டாலர் செலவிடப்படும். அடுத்த வருடத்திற்குள் விரிவாக்கம் செய்யப்படும்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் செல்ஃபோன்களில் 50 விழுக்காடு உள்நாட்டில் விற்பனை செய்யப்படுகிறது. மற்றவை மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா, மற்ற ஆசிய நாடுகள், ஆஸ்திரேலியா, நியூஜிலாந்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த விரிவாக்கம் குறித்து நோகியோ நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் ராமியோ புன்டாலா கூறுகையில், இந்தியாவின் செல் ஃபோன் துறையில் நோகியோ நிறுவனம் முதலீடு செய்வதற்கு ஏற்கனவே அளித்த வாக்குறுதியும், ஆசிய நாடுகள், மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் செல் ஃபோன் தேவை அதிகரிப்புமே ஸ்ரீ பெரும்புதூர் தொழிற்சாலை விரிவாக்கம் செய்ய காரணம்.

நோகியோ போட்டிகளை சமாளித்து, விற்பனையை அதிகப்படுத்த உற்பத்தியை பலப்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்