வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் டாலரின் விலை சரிந்தது.
இன்று காலையில் 1 டாலர் ரூ.39.62/39.63 என்ற அளவில் வர்த்தகம் தொடங்கியது.
பங்குச் சந்தையில் அதிகளவு அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ததால் டாலர்களின் வரத்து அதிகளவு இருந்தது. இதனால் இன்று 1 டாலர் ரூ.39.49 முதல் ரூ.39.65 வரை விற்பனையானது.
இறுதியில் 1 டாலர் ரூ.39.49/ ரூ.39.50 என முடிந்தது. (வெள்ளிக்கிழமை இறுதி விலை ரூ.39.61/ரூ.39.62).