சிங்கப்பூர்: இறக்குமதிக்கு வரி குறைப்பு

சனி, 1 டிசம்பர் 2007 (11:37 IST)
சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு இறக்குமதி வரியை குறைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கையின் விதிகளின் படி, சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 555 வகையான பொருட்களுக்கு இறக்குமதி வரியை முழுவதுமாக நீக்குதல் அல்லது குறைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருப்பதாக் மத்திய தகவல் மற்றும் ஒலி பரப்புத்துறை அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த இறக்குமதி வரி குறைப்பு இன்று முதல் (டிசம்பர்) அமலுக்கு வருகிறது.

இதற்கு ஈடாக ஆசியன் அமைப்புக்கும், இந்தியாவிற்கும் இடையே தாராள வர்த்தக உடன்படிக்கை ஏற்படும் போது சிங்கப்பூரும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு‌ம் வரியை குறைப்பது, சரக்கு எந்த நாட்டை சேர்ந்தது என நிர்ணயித்தல் போன்ற மாற்றங்களை செய்யும்.

இந்தியா தற்போது சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 555 பொருட்களுக்கு வரியை குறைத்திருப்பதால், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்