சில்லறை வணிகம் ரூ.2 லட்சம் கோடி!

வெள்ளி, 23 நவம்பர் 2007 (19:16 IST)
இந்தியாவில் அடுத்த மூன்று ஆண்டுகளில் சில்லரை வணிகத்தின் அளவு ரூ.2 லட்சம் கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரில் நடந்த சில்லரை வணிகம் குறித்த கருத்தரங்கில் ஆர்.ஏ.எம்.எம்.எஸ் அமைப்பின் தலைவர் கண்ணன் பேசும் போது, இந்தியாவில் சில்லரை வணிகத்தின் அளவு 2010 ஆணடில் 2 லட்சம் கோடியை எட்டும் என எதிர்பார்க்கப் படுகிறது. இது 2016 ஆம் ஆண்டில் 9 லட்சம் கோடியாக வளர்ச்சி அடையும்.

சில்லரை வணிகத்தின் வளர்ச்சி வருடத்தின் வளர்ச்சி வருடத்திற்கு 37 விழுக்காடாக இருக்கின்றது. இதன் வளர்ச்சி அடுத்த ஆண்டில் 42 விழுக்காடாக உயரும். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சில்லரை வணிகத்தின் வளர்ச்சி வியப்பில் ஆழ்த்துவதாக உள்ளது. பல நேரங்களின் இதன் வளர்ச்சிக்கு நம்மால் ஈடு கொடுக்க முடியவில்லை. இதன் வளர்ச்சியும், இத்துறையில் பன்னாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதால் தேவையான தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பலன் பெற வேண்டும் என்று கூறினார்.

ஜே.சி.வில்லியம் குழுமத்தின் நிறுவனர் ஜான் வில்லியம் பேசுகையில், இந்தியாவில் மத்திய தர வர்க்கத்தினரின் வாங்கும் திறன் அதிகரித்து வருகிறது. இவர்களின் தேவையை சில்லரை வணிக துறை நிறைவேற்ற வேண்டிய நேரமிது. அதே நேரத்தில் நுகர்வோரின் நன் மதிப்பையும் சமூக பொறுப்புணர்ச்சியையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

சர்வதேச அளவில் சில்லரை வணிகத்தின் முதன்மையான நிறுவனமான வால்மார்ட் இந்தியாவில் 2008 ஆம் ஆண்டில் வர்த்தகத்தை தொடங்க போகிறது. சில்லரை வணிகத்தில் தொழில் நுட்பம் மிக்கிய பங்கு வகிக்கும் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்