ஏர் ஸ்பிரிங் தயாரிக்க சுந்தரம் இன்டஸ்டிரிஸ் அமெரிக்க நிறுவனத்துடன் கூட்டு!

Webdunia

வியாழன், 11 அக்டோபர் 2007 (20:35 IST)
டி.வி.எஸ். குழுமத்தை சேர்ந்த சுந்தரம் இன்டஸ்டிரிஸ், அமெரிக்காவைச் சேர்ந்த ஃபயர்ஸ்டோன் இன்டஸ்டிரியல் ப்ராடக்ட் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து ஏர் ஸ்பிரிங் தயாரிக்கமும் தொழிற்சாலை அமைக்கப் போகிறது.

இரண்டு நிறுவனங்களும் இணைந்து மாசு ஏற்படுத்தாத நவீன தொழில்நுட்பத்தில் ஏர் ஸ்பிரிங் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்கின்றன.

இதில் தயாரிக்கப்படும் ஸ்பிரிங் ரயில்வே மற்றும் போக்குவரத்து துறையில் உள்ள மற்ற நிறுவனங்களுக்கும் விற்பனை செய்யப்படும். அதிர்வு இல்லாமல் சொகுசாக பயணம் செய்பும் பேருந்து போன்றவைகளுக்கு ஏர் ஸ்பிரிங் பயன்படுத்தப்படுகிறது. இத்துடன் அதிவிரைவு சொகுசு ரயில்களை அறிமுகப்படுத்திவரும் ரயில்வேக்கும் பயன்படும்.

ஏர் ஸ்பிரிங் தற்போது உபயோகத்தில் உள்ள பட்டை, சுருள் கம்பி ஸ்பிரிங்குகளை விட, அதிகளவு அதிர்வுகளை தாங்கும் திறன் வாய்ந்தது. அத்துடன் அதிகளவு எடையை தாங்கும் திறன், ஸ்பிரிங்கின் உயரத்தை மாற்றி அமைக்கும் வசதிகளையும் கொண்டது என்று கூட்டு நிறுவனத்தின் இணை மேலாண்மை இயக்குநர் ஆர். நரேஷ் பத்திரிக்கை செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்