இன்று காலை மும்பை பங்குச் சந்தை தொடங்கிய ஐந்து நிமிடத்திலேயே, குறியீட்டு எண் சென்செக்ஸ் எகிறியது.
காலையில் வர்த்தகம் ஆரம்பித்தவுடன், குறியீட்டு எண் 17,913.30 புள்ளிகளை தொட்டது. பிறகு 10.15 மணியளவில், பங்குகளின் விலை குறைய தொடங்கியதால், குறியீட்டு எண் 17,760 புள்ளிகளாக சரிந்தது. பிறகு மீண்டும் பங்குகள் வாங்குவதில் வெளிநாட்டு மூதலீட்டு நிறுவனங்கள் ஆர்வம் காண்பித்தனர். அதனால் பங்குகள் விலை அதிகரித்தன. காலை 11.15 மணியளவில் குறியீட்டு எண் 17,851 புள்ளிகளாக அதிகர்த்தது.
அந்நிய நாடுகளில் இருந்து வந்த தகவல்களால், அந்நிய மூதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினார்கள். இதனால் விலைகளில் ஏற்ற இறக்கம் இருப்பதாக பங்குச் சந்தை புரோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதே போக்கு தேசிய பங்குச் சந்தையிலும் காணப்பட்டது. காலையில் நிப்டி குறியீட்டு எண் 5208.15 என்ற அளவில் வர்த்தகம் தொடங்கியது. பிறகு 5,192.05 புள்ளிகளாக குறைந்தது. வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே நிப்டி 5241 புள்ளிகளாக எகிறியது. பங்குகளின் விலைகளில் அதிகளவு ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. இதனால் 1 மணியளவில் நிப்டி 5189 புள்ளிகளாக இருந்தது.
இன்று பங்குச் சந்தையில் ஆபத்தான வகையில் அதிக ஏற்ற இறக்கம் காணப்படுவதாக புரோக்கர்கள் தெரிவித்தனர்.