பங்குச் சந்தை பின்னடைவு!

Webdunia

வியாழன், 20 செப்டம்பர் 2007 (15:28 IST)
மும்பபங்குசசந்தையில், இன்றகாலபங்கவிற்பனதொடங்கியவுடன், பங்கவிற்பனமும்முரமாஇருந்தது. பங்குகளினவிலஉயர்ந்தகாணப்பட்டது. இதனால் குறீயீட்டு எண் 16,368.57 புள்ளிகளைத் தொட்டது. ஆனால் சில நிமிடங்களிலேயே சரிய தொடங்கியது. இதற்கு முக்கிய காரணம், அமெரிக்க டலருக்கு எதிரான இந்திய ரூயாயின் மதிப்பு உயர்வதால், தகவல் தொழில்நுட்ப பங்குகளின் விலை குறைந்தது. இதனால் காலையில் உயர்ந்த குறியீட்டு எண் சில நிமிடங்களிலேயே நேற்றைய நிலவரத்திற்கு வந்தது.

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை அரை விழுக்காடு குறைத்ததால், நேற்று இந்தியா உட்பட ஆசிய பங்குச் சந்தைகளில் பங்குகளின் விலைகள் உயர்ந்தன. இதனால் குறியீட்டு எண்ணும் அதிகரித்தது. இந்த போக்கு நீடிக்கவில்லை. இன்று மீண்டும் பழைய நிலைக்கே திரும்பியது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 16,341.55 புள்ளிகளில் தொடங்கி ( நேற்றைய முடிவு 16,322.75 ) சில நிமிடங்களிலேயே 16,368.57 புள்ளிகளைத் தொட்டது. ஆனால் பங்குகளை விற்று இலாபம் பார்க்கும் போக்கால், படிப்படியாக விலைகள் குறைந்து குறியீட்டு எண் 16,261.36 புள்ளிகளாக சரிந்தது. பிறகு 10.30 மணியளவில் 16,304.26 ஆக இருந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையிலும் பங்குகளின் விலை உயர்ந்தது. இதனால் நிப்டி குறியீட்டு எண் 4,750.15 புள்ளிகளை தொட்டது. பிறகு சரிந்து 10.30 மணியளவில் 4,730.40 புள்ளிகளாக இருந்தது. (நேற்றைய முடிவு 4,732.35 ) தேசிய பங்குச் சந்தையிலும் டாலரின் மதிப்பு குறைந்ததால், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் விலைகள் குறைந்து, குறியீட்டு எண் சரிய காராணமாக இருந்தது.

அந்நியச் செலவாணி சந்தையில் டாலரின் மதிப்பு ரூ. 40 க்கும் குறைந்தது. இன்று ஒரு டாலரின் மதிப்பு ரூ 39.90 / 91 ஆக இருந்தது.

பெட்ரோலிய கச்சா எண்ணையின் விலை பீப்பாய் 82 டாலராக உயர்வு, இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய விவகாரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கும், இடது சாரி கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்வது போன்ற காரணங்களும் பங்குச் சந்தை, பாதிப்பதற்கும் காரணமாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்