மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் உயர்வு!

Webdunia

செவ்வாய், 18 செப்டம்பர் 2007 (20:01 IST)
இன்று மும்பை பங்குச் சந்தையில் குறியீட்டு எண் 164 புள்ளிகள் உயர்ந்தது. வங்கிகள், இயந்திரங்கள், தளவாட சாமான்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு வாங்கும் போக்கு காணப்பட்டது.

இன்று காலையில் சிறிய அளவில் குறியீட்டு எண் குறைந்தது. ஆனால் பங்குகள் வாங்கும் போக்கு அதிகரித்ததால், படிப்படியாக உயர்ந்தது. அதிகபட்சமாக 15,691.88 புள்ளிகளாகவும், குறைந்த அளவாக 15, 468.80 புள்ளிகளாகவும் இருந்தது. இறுதியில் குறியீட்டு எண் 15,669.12 புள்ளிகளாக இருந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையில் விலைப்புள்ளியான நிப்டி குறீயிட்டு எண் 51.55 புள்ளிகள் உயர்ந்தது. இன்றைய வர்த்தகத்தில் அதிகபட்சமாக 4,546.20 புள்ளிகளும், குறைந்த பட்சமாக 4,495.65 புள்ளிகளாக இருந்தது. இறுதியில் குறீயீட்டு எண் 4546.20 புள்ளிகளாக இருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்