பங்குச் சந்தைகளில் ஏற்றம்!

Webdunia

புதன், 12 செப்டம்பர் 2007 (13:40 IST)
அமெரிக்க மைய வங்கி வட்டி விகிதத்தை அடுத்த வாரத்தில் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பை அடுத்து சர்வதேச பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றம், இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்றத்தை அளித்துள்ளது!

மும்பை பங்குச் சந்தைக் குறியீடு இன்று காலை வர்த்தகம் துவங்கிய 10 நிமிடத்தில் 119 புள்ளிகள் அதிகரித்து 15,661 புள்ளிகளாக உயர்ந்தது. அதன்பிறகு ஏற்பட்ட லேசான பின்னடைவால் 15,601 புள்ளிகளுக்கு குறைந்தது.

தேச பங்குச் சந்தைக் குறியீடு 34 புள்ளிகள் உயர்ந்து 4,531 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்