பங்குச் சந்தைகளில் சரிவு

Webdunia

புதன், 29 ஆகஸ்ட் 2007 (12:14 IST)
மும்பை பங்குச் சந்தை குறியீட்டை நிர்ணயிக்கும் அதிக விலை கொண்ட பங்குகளின் விற்பனை அதிகரித்ததன் காரணமாக மும்பை பங்குச் சந்தை குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் 327 புள்ளிகள் சரிந்தது.

நேற்றைய வர்த்தகத்தில் 77 புள்ளிகள் அதிகரித்த மும்பை பங்குச் சந்தை குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் ஏற்பட்ட சரிவினால் 14,592 புள்ளிகள் குறைந்தது.

தேசப் பங்குச் சந்தை குறியீடு 94 புள்ளிகள் குறைந்து 4,226 புள்ளிகளாக சரிந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்