உலக பங்குச் சந்தைகளில் ஏற்பட்டு வரும் ஏற்றத்தின் பிரதிபலிப்பாக இந்திய பங்குச் சந்தைகளில் இன்று இரண்டாவது நாளாக முன்னேற்றம் காணப்படுகிறது.
நேற்றைய வர்த்தகத்தில் 260 புள்ளிகள் உயர்ந்த மும்பை பங்குச் சந்தை குறியீடு இன்று காலை முதல் 5 நிமிடத்தில் 96 புள்ளிகள் உயர்ந்து 14,555 புள்ளிகளை எட்டியது.
தேசப் பங்குச் சந்தை குறியீடு 97 புள்ளிகள் உயர்ந்து 4,250 புள்ளிகளை தொட்டது.
தற்பொழுது மும்பைப் பங்குச் சந்தை குறியீடு 14,515 புள்ளிகளாகவும், தேசப் பங்குச் சந்தை குறியீடு 4,232 புள்ளிகளாகவும் உள்ளது.
கிராசிம் இன்டஸ்ட்ரீஸ், இன்டால்கோ, பெல், எல்.என்.டி, சத்யம் கம்ப்யூட்டர்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், எச்டிஐ ஆகியவற்றின் பங்குகள் ஏற்றத்தில் உள்ளன.