சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்வு!

Webdunia

திங்கள், 20 ஆகஸ்ட் 2007 (13:32 IST)
யு.எஸ். வங்கி கூட்டமைப்பு, முக்கிய வங்கிகளில் வாங்கும் கடன் மீதான வட்டியைக் குறைத்ததையடுத்து ஆசிய பங்குச் சந்தைகளில் பங்குகள் விற்பனை அதிகரித்ததால் மும்பை பங்குச் சந்தையிலும் இன்று காலை வர்த்தகத்தில் 500 புள்ளிகள் உயர்ந்தது!

இன்று காலை வர்த்தகம் துவங்கிய 5 நிமிடத்திலேயே, மும்பை பங்குச் சந்தைக் குறியீடு 538.57 புள்ளிகள் உயர்ந்து 14,680 புள்ளிகளை எட்டியது. கடந்த வாரங்களில் தொடர்ந்து சரிவைச் சந்தித்த வந்த முக்கிய பங்குகள் விலைகள் கணிசமாக உயர்ந்தன.

இதேபோல தேச பங்குச் சந்தையும் 154.55 புள்ளிகள் உயர்ந்து 4,262.60 புள்ளிகளை எட்டியுள்ளது.

யு.எஸ். வங்கி கூட்டமைப்பு, முக்கிய வங்கிகளில் வாங்கும் கடன் மீதான வட்டியை 0.5 விழுக்காடு குறைத்ததையடுத்து ஆசிய பங்குச் சந்தைகளில் 3.5 முதல் 5.5 விழுக்காடு வரை உயர்வு காணப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்