பங்குச் சந்தைக் குறியீடு 200 புள்ளிகள் உயர்வு!

Webdunia

செவ்வாய், 7 ஆகஸ்ட் 2007 (13:03 IST)
மும்பை பங்குச் சந்தைக் குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் 240 புள்ளிகள் உயர்ந்து மீண்டும் 15,000 புள்ளிகளை தாண்டியுள்ளது!

பரஸ்பர நிதிகள், அந்நிய முதலீடுகள், பங்குச் சந்தையில் அதிகரித்ததன் விளைவாக இந்த ஏற்றம் உருவாகியுள்ளதென பங்குச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை 5 நிமிடத்தில் 15,142 புள்ளிகளை எட்டிய மும்பை பங்குச் சந்தைக் குறியீடு, அதன்பிறகு 70 புள்ளிகள் குறைந்து 15,073 புள்ளிகள் அளவிற்கு நிலைபெற்றுள்ளது.

ிஃப்டி 44 புள்ளிகள் அதிகரித்து 4,384 புள்ளிகளை எட்டியுள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் விப்ரோ, அம்புஜா, ஏசிசி, ரிலையன்ஸ் எனர்ஜி, பார்தி ஏர்டெல், எல் அண்ட் டி ஆகிய பங்குகளின் விலைகள் உயர்ந்துள்ளது.

எஸ்.பி.ஐ., ஹெச்.டி.·ப்.சி. ஐசிஐசிஐ, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் கேபிடல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், கிராசிம், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, மாருதி உத்யோக், டாட்டா மோட்டார்ஸ் ஆகியவற்றின் பங்குகளின் விலைகளும் அதிகரித்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்