வெள்ளிக்கிழமை அன்று 542 புள்ளிகளை இழந்த மும்பை பங்குச் சந்தை குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் மேலும் 100 புள்ளிகள் குறைந்து பிறகு 115 புள்ளிகள் உயர்ந்து முன்னேற்றம் கண்டுள்ளது.
இன்று காலை 11 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை குறியீடு 15,350 புள்ளிகளை எட்டியுள்ளது.
அதிக விலை கொண்ட ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், பாரத அரசு வங்கி, இந்துஸ்தான் லீவர் ஆகிய நிறுவனங்களின் காலாண்டு முடிவு சிறப்பாக இருந்ததன் காரணமாக அந்த பங்குகளில் முதலீடு அதிகரித்ததை அடுத்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
தேச பங்குச் சந்தை 19 புள்ளிகள் உயர்ந்து 4,464 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.
கடந்த வாரத்தில் இழந்த அளவிற்கு இந்த வாரம் பங்கு வர்த்தகத்தில் உயர்வு இருக்கும் என்று சந்தை பார்வையாளர்கள் கூறியுள்ளனர்.
பாரத அரசு வங்கியின் பங்கு ரூ.72 அதிகரித்து 1572 ஆகவும், ரிலையன்ஸ் ரூ.12 அதிகரித்து ரூ.1878 ஆகவும் அதிகரித்துள்ளது.