இரும்புத் தாது மீதான ஏற்றமதி தீர்வையை குறைக்க கோரிக்கை!

Webdunia

சனி, 7 ஜூலை 2007 (19:00 IST)
குறைந்த தர இரும்புத் தாது மீதான ஏற்றுமதி தீர்வையை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய கனிம தொழிற்சாலைகள் கூட்டமைப்பு (எஃப்.ஐ.எம்.ஐ.) மத்திய அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது!

புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அக்கூட்டமைப்பின் தலைவர் டி.கே. சாஃனி, டன் ஒன்றிற்கு ரூ.300 ஏற்றுமதி தீர்வை விதிப்பதால் சர்வதேச சந்தையில் போட்டியிட முடியாத நிலை உள்ளது என்றும், இதனால் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.

இரும்புத் தாது ஏற்றுமதியாளர்கள் சந்திக்கும் இப்பிரச்சனையால் சுரங்க உற்பத்தி பாதிக்கப்படும் நிலை உள்ளது என்றும், கடந்த இரண்டு மாதங்களில் ஏற்றுமதி 3 விழுக்காடு குறைந்துள்ளது என்றும் சாஃனி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்