வணிகர்களின் கோரிக்கையை ஏற்போம்-அமைச்சர் ஸ்டாலின்

Webdunia

சனி, 7 ஜூலை 2007 (18:46 IST)
தமிழ்நாடு வியாபாரிகள் கூட்டமைப்பு, உள்ளாட்சி கடைகள் வியாபாரிகள் சங்கம் ஆகியவை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், இந்த நிகழ்ச்சியில் வர்த்தக பிரமுகர்கள் சில கோரிக்கைகளை வைத்துள்ளனர். முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்து பேசி, கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்.

உங்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கக் கூடிய அரசுதான் இப்போது தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வணிகர்களின் கோரிக்கைகளை ஏற்று உள்ளாட்சி ஆடைகளின் குத்தகை உரிமம், 3 ஆண்டில் இருந்து 9 ஆண்டாக மாற்றப்பட்டுள்ளது. கலைஞர் ஆட்சியில் தான் வணிகர்களுக்கு நலவாரியம் அமைக்கப்பட்டது என்று அமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்