ஜூன் 16ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 4.03% ஆக இருந்த ரூபாயின் பண வீக்கம் ஒரு வாரத்தில் 0.10% உயர்ந்து ஜூன் 23ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 4.13% ஆக அதிகரித்துள்ளது.
5 வாரங்களாக தொடர்ந்து இறங்கி வந்த பணவீக்கம் இந்த ஒரு வாரத்தில் மீண்டும் உயர்ந்துள்ளது.
உணவு மற்றும் கனிமங்களின் விலையேற்றத்தால் பணவீக்கம் அதிகரித்துள்ளது என புள்ளியியல் துறைப் பிரிவு தெரிவிக்கிறது.