ருமேனியாவில் இந்திய வர்த்தக மையம்

Webdunia

செவ்வாய், 3 ஜூலை 2007 (12:59 IST)
ருமேனியாவில் இந்திய வர்த்தக மையம் அமைக்க இந்திய ஏற்றுமதி கழகங்களின் சங்கம் திட்டமிட்டுள்ளது. இது இந்திய வியபாரிகள் தங்கள் பொருட்களை ருமேனியாவில் விற்பனை செய்ய பெரிதும் உதவும் என்றும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

ருமேனியா விமான நிலையத்திற்கு அருகில் அமைய உள்ள இந்திய வர்த்தக மையம், 1000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாக அமைய உள்ளதாக இந்திய ஏற்றுமதி கழகங்களின் சங்க அதிகாரி தெரிவித்தார்.

இந்திய பொருட்கள், ஜவுளி வகைகள், கைவினைப் பொருட்கள் அல்லது தேநீர் பொருட்கள் தொடர்ந்து 12 மாதங்கள் இந்திய வர்த்தக மையத்தில் இடம்பெறும் என்றும், ருமேனியா அதிக மக்கள் தொகையும், வளரும் அண்டை நாடுகளையும் கொண்டிருப்பதால், இந்திய வர்த்தக மையம் அங்கு முக்கியத்துவம் பெறும் என்று அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்