மும்பை பங்குச் சந்தை 14,734ஐ எட்டியது

Webdunia

திங்கள், 2 ஜூலை 2007 (14:19 IST)
திங்கட்கிழமை துவங்கிய வணிகத்தில் வங்கி, கனிமப் பொருட்கள், கச்சாப் பொருட்கள் போன்றவற்றின் விலை உயர்வால் மும்பை பங்குச் சந்தை குறியீடு 84.12 புள்ளிகள் உயர்ந்து 14,734.63 புள்ளிகளைத் தொட்டது.

மும்பை பங்குச் சந்தை கடந்த பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி 14,723.88 புள்ளிகளை எட்டியதே இதுவரை அதிக உயர்வாக இருந்தது. ஆனால் இன்றோ 84.12 புள்ளிகள் உயர்ந்து 14,734 ஐ எட்டியுள்ளது.

பங்குச் சந்தையில் கச்சாப் பொருட்கள், வங்கிகள், கனிமப் பொருட்களின் பங்குகள் மீதான விலை உயர்ந்ததை அடுத்தே மும்பைப் பங்குச் சந்தை குறியீடு உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே தேசியப் பங்குச் சந்தையிலும் நிஃப்டி குறியீடு 18 புள்ளிகள் உயர்ந்து 4,336 புள்ளிகளாகக் காணப்பட்டது

வெப்துனியாவைப் படிக்கவும்