கணினி உற்பத்தியில் முன்னணி நிறுவனமாகத் திகழும் லெனோவா, புதிதாக 7 மடிக்கணிகளை (Lap Top) அறிமுகப்படுத்தியுள்ளது.
இவற்றில் 5 மடிக்கணிகளின் மானிட்டர் திரை அளவை நாமே முடிவு செய்யலாம். மற்றொரு மடிக்கணினி மூலம் தேவையான மென்பொருட்களை கணினி டெஸ்க்டாப்பில் சேமித்துக் கொள்ளும் வசதியும் உண்டு. மேலும் தகவல்கள் (data) இழக்க நேரிட்டால் அவற்றை மீட்கும் வசதியும் உள்ளதாக லெனோவா வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெனோவா இந்தியா நிறுவனம் பயனர்களின் தேவைக்கேற்ப பல்வேறு புதிய மாடல்களில் கணினிகளை அறிமுகப்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கணினி சந்தையில் 3-வது இடத்தை வகிக்கும் லெனோவா, விரைவில் அதன் இடத்தை மேம்படுத்திக் கொள்ளும் என்று தெரிய வந்துள்ளது.