இணையதளம் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி

வியாழன், 21 ஆகஸ்ட் 2008 (11:59 IST)
இணையதளத்தை பள்ளி மாணவர்கள் சரியான நோக்கங்களுக்காக பயன்படுத்துவது குறித்து சென்னை மாநகர காவல்துறையினர் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்கிறார்கள்.

இணையதளங்களை எவ்விதம் பயன்படுத்துவது என்பது பற்றிய இந்த பிரசாரத்திற்காக பிரபல தேடுதல் நிறுவனமான கூகிள் இங் உடன் இணைந்து காவல்துறையினர் இந்த பிரசாரத்தை நடத்துகிறார்கள்.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள 12 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படும். அந்தப் பள்ளிகள் மூலம் சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இணையதளத்தை சரியான நோக்கங்களுக்காக பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஆர். சேகர் வரும் 26-ம் தேதி இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்