இந்தியாவில் மடிக்கணினிகள் சந்தை 114 விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளது. 2007- 08-ம் ஆண்டு 1.8 மில்லியன் மடிக்கணினிகள் விற்றுள்ளன.
மொத்த கணினி விற்பனையில் மடிக்கணினி விற்பனைகள் 25 விழுக்காடு பங்களித்துள்ளதாக மெய்ட் தொழிற்துறை விற்பனை ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இதே ஆண்டில் கணினி மற்றும் மடிக்கணினி விற்பனைகள் சேர்ந்து 7.34 மில்லியன் யூனிட்டுகள் விற்றுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 16 விழுக்காடு அதிகம். கணினி விற்பனை மட்டும் 1 விழுக்காடு அதிகரித்துள்ளது.
அடுத்த நிதியாண்டிலும் மடிக் கணினி விற்பனை 65 விழுகாடு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இணையதள வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 2007- 08-ல் மட்டும் 7.2 மில்லியன்களாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் மொத்த இணையதள வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 52 மில்லியன்களாக அதிகரித்துள்ளது.