தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 6வது சர்வதேச ஹிந்தி மாநாட்டில் எமது வெப்துனியா.காம் பன்மொழி இணைய தளத்திற்கு அக்ஷரம் தகவல் தொழில்நுட்ப விருது வழங்கப்பட்டது.
பண்பாட்டு உறவுகளுக்கான இந்தியப் பேரவையும், சாஹித்திய அகதமியும். உத்திரப் பிரதேச மாநிலத்தின் மொழிக்கழகமும் இணைந்து நடத்திய இவ்விழாவில் 400-க்கும் அதிகமான ஹிந்தி மொழிப் பண்டிதர்களும், மொழியியலாளர்களும், எழுத்தாளர்களும், கவிஞர்களும், இதழாசிரியர்களும் கலந்து கொண்டனர்.
webdunia photo
WD
இணையத்தில் இந்திய மொழிகளை, குறிப்பாக ஹிந்தி மொழியை பரவலாகக் கொண்டு சென்ற தனித்த பங்களிப்பிற்காக அளிக்கப்பட்ட அக்ஷரம் விருதை எமது நிறுவனத்தின் தலைவரும், தலைமை இயக்க அலுவலருமான திரு. பங்கஜ் ஜெயின் பெற்றுக் கொண்டார்.
இந்தியாவின் முதன்மை பல்கலைத் தளமாக உயரவேண்டும் என்கின்ற வெப்துனியாவின் ஆர்வத்தை வெளிப்படுத்திய திரு.பங்கஜ் ஜெயின், “ வெப்துனியாவின் பல இலட்சக் கணக்கான வாசகர்களுக்கு இவ்விருதை அர்ப்பணிக்கிறோம்” என்று கூறினார்.
“இந்திய மொழி இணைய விரும்பிகளின் எதிர்பார்ப்பை ஈடேற்றும் வகையில் புதுப் புது மேம்பாடுகளை வெப்துனியா தொடர்ந்து நிறைவேற்றும்” என்றும் திரு.பங்கஜ் ஜெயின் கூறினார்.
இம்மாநாட்டின் 3 ஆம் நாள் நடைபெற்ற ஹிந்தியும், தகவல் தொழில்நுட்பமும் என்ற கருத்தரங்கில் உரையாற்றிய வெப்துனியாவின் பொருளடக்கத் தலைமை அலுவலர் திரு.ஜெய்தீப் கார்னிக், யுனிகோடிற்கு மாறியதன் மூலம் வெப்துனியா ஒரு பெரும் தொழில்நுட்ப மேம்பாட்டைச் சாதித்துள்ளது என்றும், இதனால் உலகின் எந்தவிதமான கணினியில் இருந்தும் வெப்துனியா தளங்களை சிரமமின்றி பார்க்க முடியும் என்று கூறினார்.
“எங்களது அதி நவீன தொழில்நுட்பம் மற்றும் பொருளடக்கம் யாஹூ மற்றும் எம்.எஸ்.என். மொழித் தளங்களுக்கும் அளிக்கப்படுகிறது. வெப்துனியா இந்திய மொழிகளில் மிக அருமையாக அளித்து வரும் மின் அஞ்சல் சேவையை இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று ஜெய்தீப் கூறினார்.
webdunia photo
WD
எமது நிறுவனத்தின் ஆராச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு உருவாக்கியுள்ள தேடல் சேவையின் மூலம் இந்திய மொழிகளிலேயே உலகளாவிய வலைத்தளத்தில் தேடல் செய்ய முடியும்.
11 இந்திய மொழிகளில் மின் அஞ்சல்!
மிக மிகச் சுலபமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள வெப்துனியா மின் அஞ்சல் சேவையை அஸ்ஸாமி, வங்காளி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், மலையாளம், ஒரியா, பஞ்ஞாபி, தமிழ், தெலுங்கு மொழிகளில் அளிக்கப்பட்டுள்ளது.
எமது மின் அஞ்சல் சேவையை பயன்படுத்த அந்த மொழி விசைப்பலகை அவசியமில்லை என்பது மட்டுமின்றி, அதனை பெறுவதற்கும் தனித்த மென்பொருள் தேவையும் அவசியமில்லை.
இந்தியாவின் முதல் ஹிந்தி பல்கலைத் தளத்தை அறிமுகம் செய்த வெப்துனியா.காம் நிறுவனம், நமது நாட்டின் பல்வேறு இன, மொழி, பண்பாட்டு, வயதுப் பிரிவினர் அனைவருக்கும் அவர்களின் மொழிகளிலேயே செய்திகள், திரைப்படம், விளையாட்டு, வாழ்வியல், ஆன்மிகம், அறிவியல், தகவல் தொழில்நுட்பம், ஜோதிடம், வேலை வாய்ப்பு, இலக்கியம் என பல்வேறு தலைப்புக்களில் அனைத்து தகவல்கள் மற்றும் பொருளடக்கத்தைத் தருகிறது.