ரூ.13,990-க்கு அல்ட்ரா போர்டபிள் லேப்டாப் கணினி அறிமுகம்!
சனி, 19 ஜனவரி 2008 (11:34 IST)
மிகக் குறைந்த விலையில் அதிநவீன அல்ட்ரா போர்டபிள் லேப்டாப் கணினியை எச்.சி.எல். நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறை வெகு வேகமாக விரிவடைந்து வருகிறது. தற்போது எச்.சி.எல். நிறுவனம் அதிநவீன தயாரிப்பான அல்ட்ரா போர்டபிள் லேப்டாப் கணினியை தயாரித்துள்ளது. அதை மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் இராசா அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், "இந்த குறைந்த விலை லேப்டாப் கணினி மக்களிடையே வாங்கும் சக்தியை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. வீட்டில் துவங்கி கல்வித் துறை மற்றும் சிறு, நடுத்தர வர்த்தகர்கள் அனைவரும் இந்த கணினியை எளிதில் வாங்கலாம். இத்தகைய கணினியை சாதாரண மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்த விதத்தில் அதிகமான கார்பரேட் நிறுவன பங்கேற்பு தெளிவாகிறது. இதன் மூலம் தகவல் தொழில்நுட்பத் துறையில் எழுச்சி ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை" என்றார்.
இந்த அதிநவீன அல்ட்ரா போர்டபிள் லேப்டாப் கணினியின் விலை ரூ.13,990-லிருந்து துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.