ஏப்ரல் 8 முதல் விண்டோஸ் எக்ஸ்.பி. நிறுத்தம்

வெள்ளி, 21 மார்ச் 2014 (17:56 IST)
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தின் சேவையை வரும் ஏப்ரல் 8 ஆம் தேதியுடன் நிறுத்திட முடிவு செய்துள்ளது.
FILE

இந்த விண்டோஸ் எக்ஸ்பி அறிமுகம் செய்யப்பட்டு 13 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இந்நிலையில் அதை பயன்பாட்டில் இருந்து முற்றிலும் அகற்றி கொள்ளப்படும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி அது தொடர்பான தொழில்நுட்ப சேவையும் வழங்கபடமாட்டாது என்றும், விண்டோஸ் எக்ஸ்பியை பயன்படுத்துபவர்கள் விண்டோஸ் 8.1.ஐ வாங்கிக் கொள்ளலாம் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் விண்டோஸ் எக்ஸ்.பி.யை பயன்படுத்தும் வங்கிகள் மற்றும் ஏடிஎம் சேவைகள் பாதிக்கும் எனவும், அதற்கான மாற்று ஏற்பாடுகளை சம்மந்தப்பட்ட வங்கிகள் முன்கூட்டியே செய்து கொள்ள வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்