ஹூண்டாய் ஆட்டோமேடிக் கிராண்ட் ஐ10 கார் அறிமுகம்

ஞாயிறு, 10 நவம்பர் 2013 (14:38 IST)
ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஆட்டோமேடிக் கிராண்ட் ஐ10 காரை அறிமுகம் செய்துள்ளது.
FILE

டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார், கிராண்ட் ஸ்போர்ட்ஸ் ஏடி மற்றும் கிராண்ட் அஸ்டா ஏடி என்ற 2 வகைகளில் கிடைக்கும். டெல்லியில் இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.5.64 லட்சம் மற்றும் ரூ.5.92 லட்சம்.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் (விற்பனை மற்றும் சந்தை) ராகேஷ் ஸ்ரீவஸ்தவா வெளியிட்டுள்ள அறிக்கையில், "வாடிக்கையாளர்களின் விருப்பத்தின் அடிப்படையில் ஆட்டோமேடிக் கிராண்ட் ஐ10 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்