ஜப்பானை சேர்ந்த நிசான் மோட்டார் நிறுவனம் சென்னையில் ஓவர் ஆட்டோ மொவைல் நிறுவனத்துடன் இணைந்து வாகனங்களை விற்பனை செய்து வருகின்றது. இந்நிறுவனம் நிசான் டெர்ரானோ, எஸ்.யூ.வி ரக கார்களை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.
FILE
இவ்வகை கார்களில் புளூடூத் உடன் கூடிய இன் டேஸ் ஆடியோ சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், 110 பிஎஸ் டீசல், ஆறுரக டிரான்ஸ்மிஷன் சக்தி காணப்படும் என்றும் நிசான் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. அறிமுக நிலையிலேயே இக்கார்களுக்கு வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவிலேயே முதல் வாடிக்கையாளராக சென்னையை சேர்ந்த வசந்தம் ரவி என்பவர் இக்காரை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. டெர்ரானோ கார்கள் எலக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் டிஸ்டிரிபூஸன் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாக இருக்கும் என்றும் இந்நிறுவனம் கூறியுள்ளது. இப்புதிய காரின் விலை ரூ.10 லட்சம் என்றும், பேர் ஒயிட், பிளேட் சில்வர், ஃப்ரன்ஸ் கிரே, சஃபேர் பிளாக் ஆகிய வண்ணங்களில் டெர்ரானோ கார்கள் கிடைக்கும் என்றும் நிசான் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.