தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு

வெள்ளி, 4 அக்டோபர் 2013 (13:42 IST)
FILE
தங்கம், வெள்ளி சந்தையில் இன்று ஏற்ற, இறக்கமான போக்கே காணப்படுகிறது. காலை நேர நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. அதேசமயம் பார் வெள்ளி விலை ரூ.50 குறைந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரு கிராம் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.2767 ஆகவும், 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.29,590 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.22,136க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை சிறிதளவு குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.51.30 ஆகவும், பார் வெள்ளி விலை ரூ.50 குறைந்து ரூ.47,950 ஆகவும் உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்