2001 முதல் 2010 வரை ரூ.2 இலட்சம் கோடி மூலதனம் திரட்டிய இந்திய நிறுவனங்கள்!

புதன், 29 டிசம்பர் 2010 (14:25 IST)
ரிலையன்ஸ் பவர், கோல் இந்தியா உள்ளிட்ட இந்திய நிறுவனங்கள் 2001 முதல் பத்து ஆண்டுகளில் பங்குப் பத்திரங்களை வெளியிட்டு ரூ.2 இலட்சம் கோடி மூலதனம் திரட்டியுள்ளன.

எஸ்.எம்.எஸ். குளோபல் செக்யூரிட்டீஸ் லிமி. எனும் நிறுவனம், இந்திய பங்குச் சந்தைகளில் வெளியிடப்பட்ட 385 புதிய பங்குப் பத்திரங்களின் வாயிலாக ரூ.2,09,400 கோடி மூலதனம் திரட்டியுள்ளன என்கிற விவரத்தை வெளியிட்டுள்ளது.

உலக அளவில் இந்தியாவின் பங்குச் சந்தைகள் கவனத்தை ஈர்த்தது இந்த பத்தாண்டுகளிலேயே என்று கூறியுள்ள அந்த ஆய்வு நிறுவனம், இந்திய பங்குச் சந்தைகள் மிக ஆச்சரியமான வளர்ச்சியையும், மாற்றத்தையும் இந்த பத்து ஆண்டுகளில் சந்தித்தன என்று கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்