ஹெச்.டீ.எஃப்.சி. வங்கி 2009-10 நிதி ஆண்டிற்கு, ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றிற்கு ரூ.12 இலாப பங்கு ஈவு (டிவிடெண்ட்) வழங்க முடிவு செய்துள்ளது.
ஹெச்.டீ.எஃப்.சி வங்கி சென்ற மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதி ஆண்டில், ரூ.2,948.70 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இதற்கு முந்தைய நிதி ஆண்டை விட 31.3 விழுக்காடு அதிகம்.
இந்த வங்கியின் ஒட்டுமொத்த நிகர லாபம் 33.6 விழுக்காடு உயர்ந்து ரூ.3,003.70 கோடியாக அதிகரித்துள்ளது.
வங்கியின் வட்டிச் செலவினம் 29 விழுக்காடு குறைந்துள்ளது. இதனால், நிகர வட்டி வருவாய் 27 விழுக்காடு அதிகரித்ததால், வங்கியின் நிகர லாபம் அதிகரித்துள்ளது.
சென்ற நிதி ஆண்டில் கடைசி காலாண்டில் ரூ.836.60 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. முந்தைய நிதி ஆண்டின், இதே காலாத்தை விட 32.60 விழுக்காடு அதிகம்.