பட்ஜெட்: வரி சலுகை அறிவிக்கலாம்

வியாழன், 29 ஏப்ரல் 2010 (11:26 IST)
மக்களவையில் இன்று 2010-11 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் விவாதத்திற்கு பதிலளித்து பேசுகையில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி வரி தொடர்பான சில சலுகைகளை அறிவிக்கலாம் என்று தெரிகிறது.

மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதம் முடிந்து இன்று நிறைவேற்றப்பட உள்ளது. இந்த விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள், பல புதிய வரி விதிப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டன. குறிப்பாக வீடு கட்டுமான துறைக்கு விதிக்கப்பட்டுள்ள சேவை வரியை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.

இது குறித்து நேற்று பிரணாப் முகர்ஜி கூறுகையில், பட்ஜெட் விவாதத்தின் போது எழுப்பிய கோரிக்கைளின் அடிப்படையில், சலுகைகளை நாளை அறிவிப்பேன். வரி தொடர்பாக தொழில், வர்த்தகத்துறையினர் உட்பட பல்வேறு பிரிவினரிடையே கோரிக்கைகளும், ஆலோசனைகளும் வந்துள்ளன. சில வரிகளை மாற்றி அமைக்கும் படியும், சில வரிகளை நீக்கும்படியும் கோரிக்கைகள் வந்துள்ளன என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.




வெப்துனியாவைப் படிக்கவும்