பொதுத்துறை வங்கியான பஞ்சாப்-சிந்த் வங்கி பங்குகளை வெளியிடு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து வங்கியின் சேர்மனும், மேலாண்மை இயக்குநருமான ஜி.எஸ். வேதி கூறுகையில், மத்திய அரசின் அனுமதி கிடைத்த பிறகு பங்கு வெளியிடப்படும்.
மத்திய அரசு அனுமதி அளித்தால், பங்கு வெளியீடு ஜுன் அல்லது ஜுலை மாதவாக்கில் வெளியிடப்படும்.
தற்போது பஞ்சாப-சிந்த் வங்கியில், மத்திய அரசுக்கு 100 விழுக்காடு பங்கு உள்ளது. இதில் 18 விழுக்காடு பங்குகள் வெளியிடப்படும் என்று தெரிகிறது. இதன்படி 4 கோடி பங்குகள் வெளியிட்டு சுமார் ரூ.400 முதல் 500 கோடி வரை திரட்டும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்த வங்கி 2009-10 நிதி ஆண்டில் ரூ.508.80 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது 2008-09 நிதி ஆண்டைவிட 18 விழுக்காடு அதிகம்